01 செப்டம்பர், 2009

குழந்தை...

பொம்மையைக் கண்டாலே
பொக்கைவாய் பூப்பூக்கும்
உயிர்ச்செடி .

இதழிடுக்கின் ஈறுகளால்
மனம் மயக்கும்
மானுட மலர் .

மறக்கப்போகும் சிரிப்பையெல்லாம்
அரக்கப் பறக்கச் சுரக்கும்
அரும்பு .

தங்கக் கொலுசொலிக்கும்
தகரக் கிலுகிலுப்பைக்கும்
வேறுபாடரியாத வெண்மனம் .

ரோசா செய்யும் போது
குழந்தை செய்த கடவுளின்
ஞாபக நகல் .

(எனது "நிழல் மடி " நூலிலிருந்து)

3 கருத்துகள்:

முனைவர் நா.இளங்கோ சொன்னது…

தோழர்! விசயபாரதி!
குழந்தையின் புகைப்படமே ஒரு கவிதைதான். ஒரே பதிவில் இரண்டு கவிதைகள்.
முனைவர் நா.இளங்கோ

ந‌.வீ.விசய‌ பாரதி சொன்னது…

முனைவர் நா.இளங்கோ கூறியது...
தோழர்! விசயபாரதி!
குழந்தையின் புகைப்படமே ஒரு கவிதைதான். ஒரே பதிவில் இரண்டு கவிதைகள்.
முனைவர் நா.இளங்கோ//

தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க‌ ந‌ன்றிங்க‌ முனைவ‌ர் அவ‌ர்க‌ளே.

பெயரில்லா சொன்னது…

இயன்றால் எடுத்தெரிய என்பதை எடுத்தெறிய என்று மாற்றுங்கள்