நிழல் மடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிழல் மடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 செப்டம்பர், 2009

குழந்தை...

பொம்மையைக் கண்டாலே
பொக்கைவாய் பூப்பூக்கும்
உயிர்ச்செடி .

இதழிடுக்கின் ஈறுகளால்
மனம் மயக்கும்
மானுட மலர் .

மறக்கப்போகும் சிரிப்பையெல்லாம்
அரக்கப் பறக்கச் சுரக்கும்
அரும்பு .

தங்கக் கொலுசொலிக்கும்
தகரக் கிலுகிலுப்பைக்கும்
வேறுபாடரியாத வெண்மனம் .

ரோசா செய்யும் போது
குழந்தை செய்த கடவுளின்
ஞாபக நகல் .

(எனது "நிழல் மடி " நூலிலிருந்து)

31 ஆகஸ்ட், 2009

கடல்


கருமியின் கைப்பணமாய்ப்
பருக பயன்படாத
திரவ விரயம் .
*
அலைபுகை வெளியிடும்
அசைவ உணவு
தொழிற்சாலை .
*
சந்ததியைப் பறிகொடுத்த
கடல் மீன்களின்
கண்ணீர் தேசம்.
*
"முதலை " இழந்தாலும்
முழ்கிபோகாத
இயற்கை வங்கி .
*
(எனது நிழல் மடி புத்தகத்திலிருந்து )