10 ஆகஸ்ட், 2009

விதி

சாலை விதிகளை
காலால் மிதித்தபடி
சிவப்பு விளக்கு
விழுந்தபின் ஓடினான்
ஓடும்போதே விழுந்தான்
ஆயிரம் மைல்களுக்கும் அப்பால்
அறுந்து விழுந்தது -எனக்கு
அறிமுகம் இல்லாத
ஒரு தங்கையின் தாலி !
*
மீறியது சாலை விதி !
மாறியது தலை விதி !!

5 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

வலையுலக்கு வரும் அண்ணன், கவிஞர் ந.வீ.விசயபாரதி அவர்களே வருக வருக !

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கவிஞரை
வலையுலகிற்கு
வருக வருக என
வரவேற்கிறோம்!

அன்பன்,
ஜோதிபாரதி.

ந‌.வீ.விசய‌ பாரதி சொன்னது…

கவிதைத் தோழர்கள் அத்திவெட்டி ஜோதிபாரதி மற்றும் கோ.வி கண்ணன் இருவருக்கும்

தமிழ் வலைத்தளத்தின்
தலைவாசல் வரவேற்புக்கு
நாளும் நன்றி சொல்வேன்
நட்புடன் நான்...
ந.வீ விசயபாரதி.

தமிழ் சொன்னது…

நான் தங்களின் கவிதையின் சுவைஞன்

அற்புதமான வரிகள்

தங்களின் பதிவுலகில் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி

அன்புடன்
திகழ்

ந‌.வீ.விசய‌ பாரதி சொன்னது…

தங்களின் வரவேற்புக்கு மிக்க நன்றி திகழ்மிளிர் அவர்களே.