29 ஜூன், 2010

முதுமைக்காதல்

முதுமைக்காதல்

இத்தனை ஆண்டுக்கால
இல்லறச் ச(சு)கவாசத்தில்
எத்தனையோ முறை
முயன்றிருக்கிறேன்
அவள் மீதான என்
ஆழமான அன்பினை அவள்
உள்மனம் உணரச் சொல்லிவிட...
ஆனால் என்ன செய்ய
ஒவ்வொரு முறை
முயலும்போதும் அவளது
அளப்பரிய அன்பின்
விஸ்வரூபத்தில்
வாயடைத்துப்போய்விடுவதால்
ஒருமுறைகூட சொன்னதுமில்லை...
அவளும் எதிர்பார்த்ததுமில்லை.

2 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

நல்ல கவிதை. காதல் உணர்த்தப்படுவதில்லை. உணரப்படுவது. வாழ்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…

பிளாகர் சி. கருணாகரசு கூறியது...

சொல்லனுமுன்னு நெனச்சா சொல்லிபுடனும்.

கவிதை நல்லாயிருக்கு.//

இந்த கருத்து இந்த கவிதைக்கு .... தவறுதலாக அடுத்த கவிதைக்கு சேர்ந்துவிட்டது.