19 ஆகஸ்ட், 2009

நூல் வெளியீட்டு விழா!

ஆர்ப்பாட்டமான
அழைப்பிதழ் ...
வரவேற்புரை ...
வாழ்த்துரை ...
அணிந்துரை ...
ஆய்வுரை ...
ஏற்புரை என்று
எந்தவிதமான
சம்பிரதாயச்
சடங்குகளுமின்றி
நடந்து முடிந்தது
நூல் வெளியீட்டு விழா ...
*
செழுமையாக
விம்மி வெடித்தது
செடியில் பருத்தி .

2 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

நல்லா இருக்கு !

பருத்தியெல்லாம் நூல்வெளியிட்டால் ஒவ்வொரு நிமிடமும் விழாவாகிவிடும் !

:)

ந‌.வீ.விசய‌ பாரதி சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றி கோவி. கண்ணன்.