கருமியின் கைப்பணமாய்ப்
பருக பயன்படாத
திரவ விரயம் .
*
அலைபுகை வெளியிடும்
அசைவ உணவு
தொழிற்சாலை .
*
சந்ததியைப் பறிகொடுத்த
கடல் மீன்களின்
கண்ணீர் தேசம்.
*
"முதலை " இழந்தாலும்
முழ்கிபோகாத
இயற்கை வங்கி .
*
(எனது நிழல் மடி புத்தகத்திலிருந்து )
தட்டிக்கொடுக்கவும் மென்மையாய்த் தட்டிக்கேட்கவும் நட்புடன் நான் ந.வீ.விசயபாரதி.
2 கருத்துகள்:
அன்புத் தோழர் ந.வீ.விஜயபாரதி!
கடல் கவிதை அருமை. "முதலை இழந்தாலும் மூழ்கிப் போகாத இயற்கை வங்கி" நல்ல தொடர். வாழ்த்துக்கள்- புதுவை முனைவர் நா.இளங்கோ
முனைவர் நா.இளங்கோ கூறியது...
அன்புத் தோழர் ந.வீ.விஜயபாரதி!
கடல் கவிதை அருமை. "முதலை இழந்தாலும் மூழ்கிப் போகாத இயற்கை வங்கி" நல்ல தொடர். வாழ்த்துக்கள்- புதுவை முனைவர் நா.இளங்கோ//
முனைவர் அவர்களின் நலனறிய ஆவல்.
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
நட்புடன் நான்... ந.வீ.விசயபாரதி.
கருத்துரையிடுக